இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

ஒழுக்க விழுமியமுள்ள மனிதர்களாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி சாத்தியம் - கெஹலிய

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒழுக்க விழிமியமுள்ள மனிதர்களாக நடந்துகொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி தொடர்பில் சிந்திக்க முடியும் என்று அமைச்சரும் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் 11 பேர் ஆஸ்பத்திரியில் இருவரின் நிலைமை கவலைக்கிடம்

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 பேர் படுகாயமடைந்து நிலையில் மாத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் கடந்த சில தினங்களாக வாய்த்தர்க்கம் இருந்ததோடு, இம்மாணவர்கள் இன்று மோதிக்கொண்டனர் என மாத்தரை பொலிஸார் தெரிவித்தனர். மோதலில் காயமடைந்த மாணவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் ஈடுப்பட்ட மாணவர்கள் சிலரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அரசு பொறுப்பேற்கக் கோரிக்கை

நாட்டின் ஏனைய இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் பொருடகளின் விலைகள் பல மடங்காக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இதனைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அராசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சமாதானத்தி;ற்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அமைப்பின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடைகளில் சீனி 68 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்தாலும், ஒரு ஆளுக்கு அரை கிலோ மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், வெளிக்கடைகளில் 80, 90 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், அரிசி 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், பரமநாதன் தெரிவித்துள்ளார். கெர்ழும்பில் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பூடு யாழ்ப்பாணத்தில் 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கொழும்பில் 60, 75 ரூபாவுக்குக் கிடைக்கின்ற உருளைக்கிழங்கின் யாழ்ப்பாணத்து விலை 150 ரூபா.
இத்தகைய அதிகரித்த விலையைக் குறைப்பதற்கு வழி கப்பல் செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இது தான் விலைகளைக் குறைப்பதற்குரிய ஒரேயொரு வழி எனவும் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெணத்திற்குமான மக்கள் குழுவின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார்.

மடுக்கோவிலுக்குச் செல்ல தென்பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக, மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார்

விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திரு உருவச் சிலை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையடுத்து, மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழாவையொட்டி அங்கு செல்ல விரும்பும் தென்பகுதியில் உள்ள பக்தர்களுக்காக மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடுக்கோவிலைத் தூய்மைப்படுத்தும் சமயக்கிரியைகள் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டு, மடு அன்னையில் திரு உருவச் சிலை அதனுடைய பீடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவித்தார்.
எனினும் மதகுருமார்களைத் தவிர்ந்த வேறு எவரும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு நேற்று படையினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு அன்னை மீண்டும் மடுக்கோவில் பிரதிஸ்டை செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாரவில பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவர் மதவாச்சி மன்னார் வீதியில் உள்ள மடுக்கோவில் சந்தியில் வந்து காத்திருந்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தினால் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்காக தென்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மதவாச்சியைச் சென்றடைந்த சில பக்தர்களை பொலிசார் அங்கிருந்து 2 பஸ் வண்டிகளி;ல் மடுக்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாக மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றிற்கு 200 பக்தர்கள் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள அதேவேளை, மடுக்கோவிலுக்குச் செல்பவர்கள் அதே தினம் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என படையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழா நடைபெற மாட்டாது என்றும், காலை நேரத்தில் மாத்திரம் பூஜை நடைபெறும் என்று மன்னார் ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

கல்ப் டைம்ஸ் பத்திரிகை தனது பட விளக்கத்தில் விட்ட தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளது


ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்த புகைப்படத்தின் படவிளக்கத்தில் விடப்பட்ட தவறு தொடர்பில் கல்ப் டைம் பத்திரிகை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் தாம் மன்னிப்பு கோரியும் இந்த படம் மற்றும் படவிளக்கத்தையும் நாளை மீள் பிரசுரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.8.08 இல் 8 மணி 08 நிமிடத்தில் 8 இறாத்தல் 8 அவுன்ஸில்.. 2 குழந்தைகள்

8.8.08 இல் 8மணி 08 நிமிடத்தில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. அமெரிக்காவின் அயோவா,மின்னே சொட்டா ஆகிய அருகருகேயுள்ள மாநிலங்களில் இந்த இரு குழந்தைகளும் பிறந்திருக்கின்றன. நெய்லி ஜோ ஹொவர்,ஸாண்டர் கோய் நினிக்கர் ஆகிய இரு குழந்தைகள் 8 இறாத்தல் 8 அவுன்ஸ் எடையுடன் பிறந்திருக்கின்றன. ஸாண்டர் அவரின் தாய்வழி பாட்டன்,பாட்டிக்கு எட்டாவது பேரப் பிள்ளையாவார். ஜோ ஹொவர் பிறந்த மின்னே சொட்டா லேக்ரீயன் ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் இக்குழந்தை பிறந்த நேரத்தில் லொத்தர் சீட்டுகளை வாங்கினார்கள். இதேவேளை, ஸாண்டரின் தந்தையார் சாட் ரினிக்கர் கூறுகையில், 8 தனக்கு முன்னர் அதிர்ஷ்டமற்ற எண்ணாகும்.ஆனால், இப்போது லொத்தர் சீட்டை வாங்க தான் யோசிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது -மைத்திரிபால சிறிசேன

சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பீ.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

விருந்து உணவை உண்ட 60 பேர் வயிற்று நோவால் வைத்தியசாலையில் அனுமதி

வட்டவலை அகரவத்தை தோட்டப் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் பரிமாறப்பட்ட உணவை உண்ட 60 பேர் திடீர் வயிற்று நோவு கண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கினிகத்ஹேன வைத்தியசாலையிலும் ஏனையோர் வட்டவளை மற்றும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வைபவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் வேண்டத்தகாதவர்களே உணவில் ஏதோ ஒன்றை கலந்து விட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் உணவில் எதுவும் கலக்கவில்லை எனவும் அருந்தும் நீரிலேயே குறிப்பிட்ட நபர்கள் ஏதோ பதார்த்தத்தை கலந்து விட்டிருக்கலாம் என வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார்

தவறு விட்ட பத்திரிகை


ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயம்.இது குறித்து கல்ப் டைம்ஸ் என்ற பத்திரிகை தனது பட விளக்கத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாரியாரை சிறிமாவோ பண்டாரநாயக்க என்று தவறாக குறிப்பிட்டுள்ளது.


நளினியின் விடுதலை தொடர்பான வழக்கில் 20ஆம் திகதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்துள்ள வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நளினிக்கு முன்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதும், அவரது கருணை மனுவின் மூலம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக நளினி தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நளினி கூறியிருந்ததாவது:
சிறை விதிகளின்படி 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதி நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவிடம் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு ஆலோசனைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே, இந்த முடிவை ரத்துச் செய்ய வேண்டும்; முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் நளினி கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடைபெற் வருகிறது. நேற்று இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி எதிர்வரும் 20ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இரண்டு இலங்கை தமிழர்களும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த இரண்டு மனுக்களையும் இதே வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நளினி ஆலோசனைக் குழுவிடம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கையும் தன்னுடன் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ராதாகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், அவரது வழக்கறிஞர் ரவி இந்த வழக்கோடு தங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எனினும், நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

வன்னியில் தொடர்ந்து இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைய வேண்டும்,அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு

வன்னியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து வரும் அதிகளவான மக்களுக்கு தேவையான உதவிகளும் அடிப்படை வசதிகளும் அவர்களை சென்றடைவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பின் சட்டவியல் மற்றும் கொள்கை பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளதாவது, வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான மனிதாபிமான பணிகள் மிகவும் நெருக்கடியானதாக உள்ளது.எனவே இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும்.களமுனைகளின் முன்னணி அரங்குகளில் யார் இருந்தாலும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பணிகள் சென்றடைவதற்கு அவர்கள் உதவி புரிய வேண்டும்.தற்போது வட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவது எமக்கு கவலையை தோற்றுவித்துள்ளது. அவர்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவி பொருட்களும் கிடைப்பதில்லை.வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மரங்களின் கீழ் வாழ்வதாக மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. போரினால் பாதிப்படைந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை தொடர்பாக நாம் அதிக கவலை அடைந்துள்ளோம். இந்த பாதகமான நிலை மேலும் மோசமடைவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனுசரணைகளை வழங்க வேண்டும் என்பதே போரியல் சட்டமாகும்.

மடுமாதாவை வழிபட தினமும் 200 பக்தர்களுக்கு அனுமதி - பாதுகாப்பு அமைச்சு

நாட்களுக்கு மடு திருப்பதி பிரதேசத்திற்கு தினமும் 200 பக்தர்கள் சென்று வழிபாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மடு புனிதத்தல பிரதேசத்திற்கு பொது மக்கள் பகல் வேளைகளில் பிரவேசிக்க முடியும் எனவும் அங்கு சமய வழிபாடுகளில் ஈடபட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இன்று இரவு அறிவித்துள்ளது.
மடு தேவாலயத்தை சூழவுள்ள பிரதேசங்களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் தினமும் 200 பக்தர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு,தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிபானங்களை வழங்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2008-08-11

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலி

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்க்கெய் லெவ்ரோவ் சனிக்கிழமை ஒத்துக்கொண்டுள்ளார். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையேயான மோதலால் ஜார்ஜியாவில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிலையில் ரஷியாவின் தாக்குதலில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜார்ஜியா நினைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, கடந்த சில தினங்களாக ஜார்ஜியா மீது நடத்தி வரும் தாக்குதலை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஜார்ஜியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் ரஷியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. பிரச்னையை சர்வதேச நடுநிலைக் குழு மூலம் சுமுகமாகத் தீர்த்து வைக்க ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும் என, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ள தங்களது நாட்டுப் படை வீரர்களை எந்தச் சூழ்நிலையிலும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ஜார்ஜியாவுடனான போர்நிறுத்த உடன்பாட்டை நிலைநிறுத்த முயற்சிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. எச்சரிக்கை: ஜார்ஜிய ராணுவத்துக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. கண்டித்துள்ளது. ஜார்ஜியாவில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நிலைமை மோசமாகி வருகிறது. இதை தான் கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தங்கள் வசம் கொண்டுவர ஜார்ஜியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள ரஷியப் படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை வெள்ளிக்கிழமை முற்றியது. ரஷியப் படைகள் மீது ஜார்ஜியா படை திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தியது.


தாய்லாந்தில் ஹெலிகொப்டர் விபத்து 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் பலி

தாய்லாந்தில் ஹெலிகொப்டரொன்று விழுந்து 4 இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். உயரதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் தென் மாகாணமான யாலா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்த 10 பேரும் பலியாகியுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டம் நிறைந்ததாகும்.எனவே ஹெலிகொப்டர் இயல்பாகவே விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால், இது தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்காதென நம்புவதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் தீவிரம் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அகதிகளுக்கான தூதரக அதிகாரி ரான் ரெட்மெண்ட் கேட்டுக்கொண்டுள்ளார். அப்பாவி மக்களுக்கு சேதம் ஏற்படாதவாறு ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். அப்பாவிகளைக் காக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு தரப்பினரையும் அவர் கேட்டுக்கோண்டார். போர் நடைபெறும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இந்தச் சண்டையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துக் கூடாது. தாக்குதலின்போது பொது மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை வடக்குப் பகுதியில் தற்போது உணவு, இருப்பிடம், குடிநீர், எரிபொருள் சப்ளை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். ஜூலையில் மட்டும் இலங்கை வடக்குப் பகுதியிலிருந்து 12 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இலங்கை வடபகுதியில் மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும். இதற்கு இலங்கையில் உள்ள அனைத்து கட்சியினரையும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக விலக்கிக்கொண்டது. இதையடுத்து ராணுவத்தினர் இலங்கை வட பகுதி மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலில் ராணுவத்தின் கை ஓங்கி உள்ளதாகவும் இலங்கை அரசு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

ராகம விகாரையில் யானை மிரண்டது பெண் ஒருவர் பலி 32பேர் படுகாயம்

ராகமப் பகுதியில் உள்ள தல்கொல விகாரையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் யானை ஒன்று மிரண்டு ஓடியதில் அதன் காலில் மிதிப்பட்டு பெண்ஒருவர் உயிரிழந்தார். விகாரையில் நின்றவர்கள் பதற்றத்தில் தலைதெறிக்க ஓடியவேளையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 32பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது அந்த விகாரையில் நேற்று வருடாந்த பெரஹரா உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது பெரஹரா உற்சவத்திற்காக அந்த விகாரைக்கு கொண்டு வரப்பட்டிருந்த யானை ஒன்றே மிரண்டதாகவும் பொலிஸார் கூறினர். காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்றரின் பில்லியன் மடங்கு சிறிய நனோ அளவுத் திட்டத்திற்கு உட்பட்டவையாகும். இந்நிலையில் மேற்படி தொழில்நுட்பம் அபிவிருத்தி செய்யப்படும் பட்சத்தில் ஆளொருவரை முழுமையாக கண்ணுக்கு புலப்படாமல் மறைக்கக்கூடிய மேலாடைகளை உருவாக்குவது சாத்தியமாகும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானியான ஸியாங் ஷாங்கின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், "நேச்சர் அன்ட் சயன்ஸ்' ஆய்வு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்ப முறைமையானது நீர்வீழ்ச்சியொன்று பாறையை எவ்வாறு கண்ணுக்கு புலப்படாமல் மறைக்கின்றதோ, அது போன்று தொழிற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபருக்கு பின்னாலுள்ள ஒளியை அவரது முன்புறமாக குவியச் செய்வதன் மூலம், அந்நபரை மற்றவர்கள் பார்வையில் தென்படாமல் மறையச் செய்ய முடியும் என அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சியானது, இராணுவத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் மேற்கொள்ள உதவுவதை இலக்காகக் கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வன்னி மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் நிலை - ஐ.நா. முகவர் அமைப்புக்கள் தகவல்


வன்னியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சுக்களும் ஷெல் தாக்குதல்களும் எந்த வேளையிலும் இடம்பெறலாம் என்ற சூழ்நிலையில் அச்சத்தின் மத்தியிலேயே மாணவர்கள் பரீட்சைக்குச் செல்கின்றனர் என ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் ஏற்கனவே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி பரீட்சை ஆரம்பமான பின்னர் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களால் பரீட்சை நிலையங்களை இடம் மாற்ற வேண்டி ஏற்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஐ.நா. வின் முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு, வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால் வன்னியில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு தொடரும் விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் மாணவர்கள் அச்சத்தின் மத்தியிலேயே பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிதாக இடம்பெயரும் மக்கள் தற்காலிக தங்குமிடத்தையும் உணவையும் பெறுவதற்கே பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

கம்பஹா, கண்டி பகுதிகளில் தேடுதல்; 19 தமிழர்கள் கைது

கம்பஹா, மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 19 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது கம்பஹா பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று இரவு முதல் சுமார் 5 மணிநேரங்கள் வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களே இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை இன்று அதிகாலை கண்டி பொலிஸ் வளாகத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுமார் 27 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் பூநகரியை நோக்கி எறிகணைத் தாக்குதல்

யாழ்ப்பாண ஏரிப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து படையினர் நேற்று மாலை 6 மணியில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூநகரிப் பிரதேசம் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாரிய சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் குருநகர், கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் அரியாலை ஆகிய இடங்களின் மக்கள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஜோர்ஜியா மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல் 2000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு

திபிலிஸி, ரஷ்ய யுத்த விமானங்கள் இரண்டாவது நாளாக ஜோர்ஜியா மீது குண்டுமாரி பொழிந்து வருவதால் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும், கட்டிடங்கள், வீடுகள் என்பன தீ பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்குமிடையே முழு அளவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா 6000 துருப்புக்களை தரை மார்க்கமாகவும் 4000 துருப்புக்களை கடல் மார்க்கமாகவும் ஜோர்ஜியாவுக்குள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச சமூகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையிலுள்ள இராணுவ விமானத் தளமொன்று ரஷ்ய படையினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்ஜியாவிலுள்ள சிவிலியன் இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது டசின் கணக்கான யுத்த விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் ஆயுத விநியோகத்திற்கு இந்தியாவின் மீது தங்கியிருக்கும் நிலை அதிகரித்துள்ளது- ஐ.ஏ.என்.எஸ் செய்திச் சேவை

இதேவேளை, தமிழ் நாட்டில் விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களுக்கு உதவி செய்யும் இந்தியர்களும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதானதுவிடுதலைப் புலிகள் தமது ஆயுத விநியோகத்திற்கு இந்தியாவின் மீது தங்;கியிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுவதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான இராணுவ மோதல் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலிருந்து தமக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து இதுவரை 7 இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டுப் பொலிசார் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட கடற்புலித் தலைவர்களில் ஒருவரான தம்பி அண்ணா என்பவரும் அடங்குவதாக ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டடோரில் 7 பேர் பண ரீதியான இலாபத்தினைக் கருத்திற்கொண்டே விடுதலைப் புலிகளுக்கு உதவ முனைந்ததாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.
ஐஎன்லங்கா இணையம்குறிப்பாக, இந்த சந்தேகநபர்கள் விடுதலைப் புலிகளுக்கு தொலைத் தொடர்பு உபகரணங்களையே கடத்த முற்பட்டிருப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தற்போது பாரிய வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதன்பொருட்டு இந்தியாவின் மீதும், தமிழ் நாட்டின் மீதும் புலிகள் தங்கியிருக்கவேண்டிய நிலை அதிகரித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வாவின் காடைத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவர் -இடதுசாரி முன்னணி

தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வழமையான கீழ்த்தரமான காடைத்தனத்தை ஜனாதிபதிக்குத் தெரியாமல் சிரச ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டிருக்க முடியாதென்றும், மேர்வின் சில்வாவுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவரென்றும் இடதுசாரி முன்னணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் காரியாலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே சிரச ஊடகவியலாளர்கள் பால திறப்பு விழாவுக்கு சென்றுள்ளனர். அங்கே பட்டப்பகலில் எல்லோர் முன்னிலையிலும் ஊடகவியலாளர்களை தாக்கியதுடன் ஊடக உபகரணங்களையும் மேர்வின் சில்வா கொள்ளையடித்துள்ளார். தொடரும் மேர்வின் சில்வாவின் அடாவடித்தனங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படா விட்டால் விரைவில் மக்கள் நலல பாடத்தைப் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளையில் போலி கச்சேரி கண்டுபிடிப்பு

கொழும்பு புறநகரான அவிசாவளை புவக்பிட்டியில் வீடொன்றில் இரகசியமான முறையில் இயங்கி வந்த போலி கச்சேரியை பொலீசார் நேற்று முன்தினம் கண்டுபிடித்துள்ளனர். இரகசிய தகவல் ஒன்றையடுத்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பொலீசார் நடத்தி சோதனையின்போது போலியான பிறப்பு சான்றிதழ்கள், வெற்றுப்பத்திரங்கள், திருமண, மரண சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள், அடையாளஅட்டைகள், முக்கிய அதிகாரிகளின் பெயருடைய றப்பர் முத்திரைகள், கடித தலைப்புக்கள், கடித உறைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியிருந்த மலையகத்தைச் சேர்ந்த இரு தமிழர் இளைஞர்களும் கைதாகியுள்ளனர். அவசாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில ஊழியர்களின் தொடர்புகளும் உள்ளவென்று பொலீசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் சிலரை பொலீசார் தேடிவருகின்றனர்.

போலிக் கடவுச்சீட்டில் கனடா செல்ல முற்பட்ட இலங்கைப் பிரஜை சென்னையில் கைது

போலியான கடவுச்சீட்டு மூலம் கனடாவுக்குச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய குடிவரவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கைப் பிரஜையான இவர் கொழும்பிலிருந்து திருச்சி சென்று பின்னர் சென்னையிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயற்சித்துள்ளார். இவருடைய கடவுச்சீட்டையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைப்பற்றியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி நொண்டிக்குதிரை இதனாலேயே அரசுடன் இணைந்துள்ளோம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்

பெல்மதுளை, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். யானைக்கு மேல் சேவல் போகலாம், கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவாணை கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பட்ட ஒருவருக்காக செயற்படாது மலையக சமூக நலன் கருதியே அன்று தொடக்கம் இன்றுவரை செயற்படுகின்றது.
மலையக மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய எண்ணுபவர்கள் இ.தொ.கா.வுடன் இணைந்தும் கொள்வார்கள். சுயநல நோக்கமுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். யார் வேண்டுமென்றாலும் வரலாம், போகலாம். ஆனால் இ.தொ.கா தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு மக்களின் பேராதரவு உள்ளது.
நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது குறித்து விமர்சனம் செய்யப்படுகின்றது. நாம் சிறுபான்மையினத்தவர்கள். தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவி வகிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் யார் என்பதனை தீர்மானிக்க முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கட்சியை ஆதரித்தோம். அக்கட்சி வெற்றி பெறவில்லை. நாம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலையில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளோம்.
ஐ.தே.க. தற்போதைய நிலையில் ஒரு நொண்டிக் குதிரை. அக்குதிரையில் ஓட முடியாது. ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் திகழ்கின்றது. இதனால்தான் நாம் அரசில் இணைந்துள்ளோம். இதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை விமர்சனம் செய்கின்றனர்.
சாதாரணமானவர்கள் கூட ஓடும், வெற்றி பெறும் குதிரைகளையே மட்டுமே விரும்புவார்கள். நொண்டிக் குதிரையை விரும்பமாட்டார்கள். நாமும் அதனை செய்கின்றோம்.

மேலும் யானைக்கு மேல் சேவல் போகலாம். அல்லது கதிரைக்கு மேல் வெற்றிலைக்கு மேல் சேவல் பயணம் செய்யலாம். எனினும் சேவலுக்கு மேல் எதனையும் பயணம் செய்ய இ.தொ.கா என்றுமே அனுமதிக்காது.
மத்திய, ஊவா மாகாணங்களிலும் இ.தொ.கா. ஆட்சியை அமைக்கும் சக்தியாகவுள்ளது. அதேபோல், சப்ரகமுவ மாகாணத்திலும் இந்த நிலை ஏற்பட எதிர்வரும் 23 ஆம் திகதி காலையில் முருகனை கும்பிட்டு விட்டு சேவலுக்கு வாக்களித்து நமது ஒற்றுமையையும், மலையக சமூகத்தின் பலத்தையும் நிரூபிக்குமாறு வேண்டுகின்றேன். இங்கு பிரதி அமைச்சர்களான எம். சச்சிதானந்தன், ஜெகதீஸ்வரன், முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

மன்னாரில் சிவில்நிருவாகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை -கரு ஜெயசூரிய

மாவட்டத்தின் சிவில் நிருவாகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் அரச சொத்துக்கள் யாவும் புலிகளினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளதோடு; சிவில் நிருவாகத்தையும் புலிகள் சீர்குலைத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.தற்போது அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை தொடர்ந்து . படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்ட இரு பெண் விடுதலைப்புலி உறுப்பினர்களது சடலங்களை படையினர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2008-08-09

அபராதம் விதிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் ஒலிம்பிக் பார்க்க சீனாவுக்கு செல்கிறார்.. இதுசரியான நடைமுறையா? என்று கேட்கிறார் விஜித ஹேரத்

பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை மேலும்...

2008-08-08

மணலாற்றில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு

மணலாறு பகுதியில் ஐந்து முனைகளில் முன்னேற முயன்ற படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோதலின் போது நான்கு படையினரின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கடும் ஷெல்தாக்குதலை நடத்தியவாறு ஐந்து முனைகளில் படையினர் முன்னேற முயன்றனர். இதனை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில்
மேலும்...

வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! :த ஜெயபாலன்

ஓகஸ்ட் 4 காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான
மேலும்....

எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனதுகவலை!! –கருணாஅம்மான் பேட்டி

வணக்கம்! கடந்த வாரங்களில் மட்டக்களப்பில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் சகல மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தீர்கள். அவற்றின் நோக்கம் என்னவாக இருந்தது? சந்திப்புக்களில் ஏதாவது முன்னேற்றம் கண்டு கொண்டீர்களா?
மேலும்...

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகப் பிராந்திய வல்லரசான இந்தியா சார்க் மாநாட்டின்போது உடன்பாட்டுக்கு வந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அமைச்சர் கெஹெலிய இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும்....

பெங்களூரில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு

பெங்களூர்: பெங்களூர் நாகரபாவியில் இன்று ஒரு சிறிய குண்டு வெடித்தது.
மைசூர் ரோட்டில் உள்ள நாகரபாவி பகுதியின் குப்பைத் தொட்டியில் இந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

முன்னதாக இது புரளி என போலீசார் தெரிவி்த்தனர். ஆனால், பின்னர் வெடித்தது குண்டு தான் என பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.
மேலும்....

அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
மேலும்...

முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல்: குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 16 பேர் காயம்.

முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்
மேலும்....

தனது வெளியேற்றத்துடன் புலிகள் 60 வீத பலத்தினை இழந்துவிட்டனர் என்கின்றார் கருணா!

புலிகளுக்கு பெருமளவில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தது வலிந்த தாக்குதல்களே ஆகும் , நான் கூட வலிந்த தாக்குதல்களையே விரும்பிசெய்தேன் , ஆயுத வினியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலை இயக்கங்களுக்கு வலிந்த தாக்குதல் சாதகமாக இருக்கும் என கருணா சுருதிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் தற்போது படையினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு யுத்தத்தினை நடத்த வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள், தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தொடர்ச்சியான ஆயுத வினியோகம் இருக்கவேண்டும், பல முன் தாயாரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்,
மேலும்...

கிளாலியில் இருந்து நாகர் கோவில் , மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் ?

வன்னிப்பிரதேசத்தினையும் குடாநாட்டினை தொடுக்கும் கழுத்து பகுதியான கிளாலியில் இருந்து முகமாலை ஊடாக நாகர் கோவில் வரையிலான ஏறாத்தாள 12 கிலோ மீற்றர் நீளமுள்ள முன்னரங்க எல்லைப் பகுதியினையும், மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் வரையிலான 115 கிலோ மீற்றர் நீளமான முன்னரங்க எல்லை பகுதியினையும் புலிகளின் போராளிகள் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவ்வகையான நீள எல்லைப் பகுதியூடாக படையினர் தமக்கு சாதமான யுத்த முனைகளை திறக்க முற்படுகின்ற போழுது அவர்களை எதிர்கொள்வதற்கான பெரும் எண்ணிக்கையான போராளிகளை புலிகள் நிறுத்த வேண்டியுள்ளது.
மேலும்....

முல்லைதீவிலும், கிளிநொச்சியிலும் கடும் யுத்தத்திற்காக காத்திருக்கும் புலிகள்!

அரசின் 59 ஆவது படைப்பிரிவினர் அவசரம் கொள்ளாது மிகவும் நிதானமாக முல்லைதீவு காட்டினை நோக்கி முன்னேற ஆரம்பித்து இருக்கின்றார்கள். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படையினர் புலிகளின் முன்னகம் முகாமினை கைப்பற்றியதினை தொடர்ந்து ஜானகபுர, கிரிப்பன்வேவ, ஆண்டான்குளம், மற்றும் கொக்குதொடுவாய ஆகிய பகுதிகளின் ஊடாக முல்லைதீவு காட்டினை நோக்கி முன்னரக ஆரம்பித்துள்ளார்கள். பல அடி ஆழமுள்ள பாதாள அறைகளுடன் கூடிய புலிகளின் தலைவரின் மறைவிடம் என கருதப்படுகின்ற முகாமானது தற்பொழுது
மேலும்....

வெளிநாட்டு அதிகாரிகள் மீது ஈ கூட மொய்க்காத அளவுக்கு பாதுகாப்பு; அமைச்சர் ரோஹித பெருமிதம்

இந்திய இராணுவத்துக்கு நன்றி கூற தவறிவிட்டீர்கள்; ஜே.வி.பி.எம்.பி.கிண்டல் ஜீவா சதாசிவம் இந்தியா, தற்போது இலங்கைக்கொரு கேந்திர ஸ்தானமாக விளங்குவதுடன், இலங்கைக்கு பெருமளவிலான உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, சார்க் மாநாட்டைச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; இலங்கைஇந்திய உறவு இன்று உன்னதமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும்
மேலும்.....

வாழைச்சேனையில் ஐஸ்வாடி உரிமையாளர் வீட்டின்மீது குண்டுவீச்சு // வாரியப்பொல வீதியில் டிப்பர் வாகனம் வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தல்

புத்தளம் மாவட்டம் சிலாபம் வாரியப்பொல வீதியில் டிப்பர் ரக வாகனமொன்று நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளது. வெள்ளைவேனில் பயணம் செய்த நால்வர் இந்த டிப்பர் வண்டியைக் கடத்திச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்...

புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேர் கைது

புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேரை ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதியன்று வாகன வீதி சோதனையின் போது மின்கலங்கள், ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் புலிகளின் சீருடைகள் பல கடத்தற் பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்...

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு, கமராக்கள் பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் நடந்தது.சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவிலயாளர்கள்,
மேலும்...

மன்னார் அரச செயலக கூட்டங்களிற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லையென கவலை

அரச செயலகத்தில் நடைபெறும் எவ்விதக் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் மன்னார் ஊடகவியளார்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை . கூட்டங்கள் அனைத்தும் மூடிய திரைக்குள் நடைபெறுவதாக மன்னார் ஊடகவியளாலளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்...

கிளிநொச்சி, முல்லைத் தீவில் கடந்த ஒரு மாதத்தில் 70,800 பேர் இடம்பெயர்வு

106 படையினர், 24 பொதுமக்கள் ஒரு மாதத்தில் பலி 684 பேர் காயம் ; சபையில் பிரதமர் தெரிவிப்பு

வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?

கஞ்சா கடத்திய சிவில் பாதுகாப்பு படை அதிகாரி உள்ளிட்ட 3பேர் கைது

இந்தியாவுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் இல்லை வெளிவிவகார அமைச்சர்

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் திரும்பிச் சென்ற பின்பும் இந்தியப்படை விவகாரம் இன்னும் அடங்கவேயில்லை..

மணலாறில் ஐந்து முனை முன்னேற்ற நடவடிக்கை முறியடிப்பு: இராணுவத்தினரின் நான்கு உடலங்கள் உட்படப் படைப்பொருட்கள மீட்பு

முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல் - முல்லைத்தீவு அரச அதிபர் உட்படப் பலர் காயம்.

மாலைத்தீவில் புதிய அரசியலமைப்பு

திஸ்ஸாநாயகத்தை விடுதலை செய்யுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசிற்கு அழைப்பு

மனித உரிமை மீறல் சம்பவங்களின் தொடர்புடையவர்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் பாதுகாப்பு வழங்காது: அந்நாட்டு அரசு அதிகாரி தெரிவிப்பு

விமானப்படையினருக்கு சொந்தமான ஆளில்லா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

&முசலி பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ள சுமார் 100 முஸ்லிம் குடும்பங்கள் எவ்வித அடிபடை வசதிகளுமின்றி தவிப்பு