இதேவேளை, தமிழ் நாட்டில் விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களுக்கு உதவி செய்யும் இந்தியர்களும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதானதுவிடுதலைப் புலிகள் தமது ஆயுத விநியோகத்திற்கு இந்தியாவின் மீது தங்;கியிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுவதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையில் கடுமையான இராணுவ மோதல் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலிருந்து தமக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து இதுவரை 7 இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டுப் பொலிசார் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட கடற்புலித் தலைவர்களில் ஒருவரான தம்பி அண்ணா என்பவரும் அடங்குவதாக ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டடோரில் 7 பேர் பண ரீதியான இலாபத்தினைக் கருத்திற்கொண்டே விடுதலைப் புலிகளுக்கு உதவ முனைந்ததாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.
ஐஎன்லங்கா இணையம்குறிப்பாக, இந்த சந்தேகநபர்கள் விடுதலைப் புலிகளுக்கு தொலைத் தொடர்பு உபகரணங்களையே கடத்த முற்பட்டிருப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தற்போது பாரிய வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதன்பொருட்டு இந்தியாவின் மீதும், தமிழ் நாட்டின் மீதும் புலிகள் தங்கியிருக்கவேண்டிய நிலை அதிகரித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

