மாவட்டத்தின் சிவில் நிருவாகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தின் அரச சொத்துக்கள் யாவும் புலிகளினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளதோடு; சிவில் நிருவாகத்தையும் புலிகள் சீர்குலைத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.தற்போது அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

